கணினிகளில், 'கேம்' அகற்றம் : 'ப்ளூ வேல்' மிரட்டலால் அதிரடி - TEACHERS AND STUDENTS EDUCATIONAL NEWS:

Post Top Ad

coollogo_com-1006369
fl

Wednesday, 6 September 2017

கணினிகளில், 'கேம்' அகற்றம் : 'ப்ளூ வேல்' மிரட்டலால் அதிரடி

coollogo_com-1006369

கணினிகளில், 'கேம்' அகற்றம் : 'ப்ளூ வேல்' மிரட்டலால் அதிரடி

பள்ளி ஆய்வகங்கள் மற்றும் மாணவர்களுக்கான கணினிகளில், 'கேம்ஸ் அப்ளிகேஷன்' இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து, அகற்ற வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். சர்வதேச அளவில் மாணவர்களை மிரட்டும், 'ப்ளூ வேல்' உள்ளிட்ட கேம்களால், மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. 
தங்கள் எதிர்காலத்தையும், கல்வியையும் மறந்து, பல மாணவர்கள், கணினிகள் மற்றும் மொபைல் போன்களில், வீடியோ கேம் ஆடுவதை, முழு நேர பொழுதுபோக்காக செய்து வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களின் உயிரை பலிவாங்கும், 'ப்ளூ வேல் கேம் அப்ளிகேஷன்' மற்றும் ஆன் - லைன் இணையதள பகிர்வுக்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதை தொடர்ந்து, பள்ளி களில் ஆய்வகங்கள், அலுவலகங்களில் உள்ள, கேம் அப்ளிகேஷன்களை கண்டுபிடித்து, அவற்றை கணினிகளில் இருந்து அகற்றுமாறு, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியே, தலைமை ஆசிரியர்களுக்கு, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆய்வகங்களில், மாணவர்கள் பயன்படுத்தும் கணினிகளையும், பள்ளி ஆசிரியர்கள், கல்வி அலுவலகங்களில் உள்ள கணினிகளையும் ஆய்வு செய்து, அவற்றில், கேம்கள் இருந்தால், அவற்றை, பதிவு நீக்கம் செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Today Rasipalan 7.9.2017 :

Today Rasipalan 7.9.2017 மேஷம் சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்கள் உதவி கேட்ட...

.com/blogger_img_proxy/

Post Top Ad